பாசி பருப்பு ஹல்வா/Moong Dal Halwa/vibsk-50
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | அலம்பிய பாசி பருப்பு | : | 200 கி (இரவு முழுவதும் ஊறவைத்தது) |
2. | கோவா | : | 100 கி |
3. | தெளிந்த நெய் | : | 200 ml |
4. | சர்க்கரை | : | 150 கி / உங்கள் சுவைக்கேற்ப |
5. | பால் | : | 1 சிறு டம்ளர் |
6. | உலர்ந்த திராட்சை | : | 3 தேக்கரண்டி |
7. | பாதாம் | : | 10-15 |
8. | முந்திரி பருப்பு | : | 10-15 |
9. | பிஸ்தா | : | 8-10 |
செய்முறை:
- ஊறவைத்த பாசி பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிருதுவான மாவாக அரைத்து
கொள்ளவும்.
- பாதாம் மற்றும் பிஸ்தாவை மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
முந்திரி பருப்பை பாதியாக உடைத்து கொள்ளவும்.
- கடாயில் தெளிந்த நெய்யை சேர்க்கவும். இதனுடன் மாவையும் சேர்க்கவும்.
நன்கு கலந்து குறைந்த சுடரில் (ஃப்லேம்) வறுக்கவும்.
4. ஆரம்பத்தில் மாவு கடாயில் ஒட்டும். அதனை எடுத்து வறுக்கவும்.
தொடர்ச்சியாக கிளறி கொண்டே வறுக்கவும். மாவை வறுக்க தோராயமாக 15-20
நிமிடங்கள் ஆகும்.
- மாவு கடாயின் ஓரத்தை விட்டு மற்றும் நெய்யிலிருந்து பிரிந்து வர
ஆரம்பித்தால் இது முழுமையாக வருத்தாகி விட்டது என்று அர்த்தம்.
- இப்பொழுது, கடாயில் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா மற்றும் உலர்ந்த
திராட்சையை மாவுடன் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். கொஞ்சம் பாதாம்,
முந்திரி பருப்பு, பிஸ்தாவை அலங்கரிக்க சேமித்து கொள்ளவும்.
- பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு அணைத்து பாலையும் உரிந்து
கொள்ளும் வரை சமைக்கவும்.
- பிறகு, கோவா சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும்.
9. சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும் மற்றும் கலந்து
கொள்ளவும்.
10. சர்க்கரை சேர்த்த பிறகு, 1 நிமிடத்திற்கு சமைக்கவும் அதன் பிறகு தீயிலிருந்து
எடுத்து கொள்ளவும். ஹல்வா சூடாக இருப்பதால், சர்க்கரை கொஞ்ச நேரத்தில்
உருகி விடும். மீண்டும் நன்கு கலந்து கொள்ளவும்.
- பாசி பருப்பு ஹல்வா தயார்.
அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
Watch Video Here:
My relatives always say that I am killing my time here at net, however I know I am getting
knowledge every day by reading such fastidious posts.
Hey there, You have done a great job. I will definitely digg it
and personally suggest to my friends. I’m sure they will be
benefited from this website.