பட்டோடே/VIBSK–09
Read This Recipe In English: Patode/Patrode/Saina
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | கோலோகேசியா இலைகள் | : | 15 (மூன்று கட்டுகளுக்காக) |
2. | கருப்பு உளுந்து | : | 1 கிண்ணம் |
3. | கடலை பருப்பு | : | 1 கிண்ணம் |
4. | மஞ்சள் தூள் | : | 1 & ½ தேக்கரண்டி |
5. | காய்ந்த மாங்காய் தூள் | : | 2 தேக்கரண்டி |
6. | சிவப்பு மிளகாய் தூள் | : | 2 தேக்கரண்டி |
7. | பெருங்காயம் | : | 2 தேக்கரண்டி |
8. | மல்லி தூள் | : | 3 தேக்கரண்டி |
9. | கரம் மசாலா | : | 1 தேக்கரண்டி |
10. | உப்பு | : | சுவைக்கேற்ப |
11. | இஞ்சி-பூண்டு விழுது | : | 1 தேக்கரண்டி (கட்டாயமற்ற) |
12. | கடுகு எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுப்பதற்கு |
செய்முறை:
- உளுந்து மற்றும் கடலை பருப்பையும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- இதனை வடிகட்டி பின்பு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்ததுடன் மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், இஞ்சி–பூண்டு விழுது (கட்டாயமற்ற) மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளவும்.
- கோலோகேசியா இலைகளை அலம்பி மற்றும் உலர வைக்கவும்.
- வெட்டுப்பலகையில் 1 இலையின் ரிப் பகுதி மேலே இருக்குமாறு வைக்கவும் பின்பு இலையின் மீது மாவை தடவவும் ( இலையின் ரிப் பகுதி கீழே இறுக்குமாறும் வைக்கலாம்).
- இரண்டாவது இலையை முதல் இலையின் மேலே வைக்கவும். அடுத்து மூன்றாவது
- இலையை வைக்கவும், நான்காவது மற்றும் ஐந்தாவது இலையை வைக்கவும். ஒவ்வொரு இலையிலும் மாவை தடவ வேண்டும்.
- இப்பொழுது இரண்டு பக்கத்திலிருந்தும் மாவை தடவி பின்பு மடிக்க வேண்டும்.
- அடுத்து மேல் பகுதியிலிருந்து மடிக்கவும் பின் கீழ் பகுதியிலிருந்து மடித்து ஒரு பண்டல் போல் செய்து கொள்ளவும். இரண்டாவது பண்டலையும் மற்றும் மூன்றாவது பண்டலையும், மற்ற 10 இலைகளிருந்தும் ஒரு போல் செய்து கொள்ளவும்.
- கடாயில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டியை கடாயின் மேலே வைக்கவும்.
- வடிகட்டியின் உள்ளே எண்ணெய் தடவவும்.
- பண்டல்களை வடிகட்டியில் வைத்து மூடி வைக்கவும்.
- 55 நிமிடங்களுக்கு நீராவியில் (ஸ்டீம் குக்) அவிக்க வேண்டும். முதல் 10 நிமிடங்கள்
- அதிக சுடரில் வைக்க வேண்டும். இப்பொழுது சுடரை மீடியமாக குறைத்து பின் அடுத்து 45 நிமிடங்களுக்கு அவிக்க வேண்டும்.
- சுடரை அணைத்து பின் பட்டோடேயை சிறிது ஆற விடவும்.
- பட்டோடேயை துண்டுகளாக வெட்டவும்.
- இந்த துண்டுகளை நன்றாக பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
அவித்ததோ/வருத்ததோ அல்லது பொறித்ததோ, பட்டோடே இவை அனைத்துடனும் ருசியாக இருக்கும். சட்னி மற்றும் டீயுடன் சூடாக பரிமாறவும்.
Recipe Step By Step:
Step-1
1. Soak the lentils (daal) overnight.
Step-2
2. Strain and grind soaked lentils to coarse batter.
Step-3
3. Add turmeric powder, dry mango powder (aamchoor), garam masala, coriander powder, red chilli powder, asafoetida (hing), ginger-garlic paste (optional) and salt to batter. Mix well.
Step-4
4. Wash the Colocasia leaves and dry them.
Step-5
5. Place 1 leaf rib side up on the cutting board and apply batter all over the leaf (can place rib side down also).
Step-6
6. Place 2ndleaf on top of 1st Next place 3rd, 4th & 5th leaf.
Step-7
7. Now fold from both the sides and apply batter.
Step-8
8. Next fold it from up side and down side making it into a bundle.
Step-9
9. Make 2nd& 3rd bundles similarly, with rest of the 10 leaves.
Step-10
10. Boil the water in wok. Place a strainer on top of the wok. Apply oil inside the strainer.
Step-11
11. Put the bundles in the strainer and cover it. Steam-cook for 55 mnts. First 10 minutes on high flame. Bring down the flame to medium and steam-cook for next 45 mnts.
Step-12
12. Put the flame to off and let the Saina/Patode cool down a little.
Step-13
13. Cut Patode in slices.