வெந்தய முளைகள் ஃப்ரை/ Fenugreek Sprouts Fry/vibsk-47
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | முளைத்த வெந்தயம் | : | 5-6 கட்டுகள் |
2. | துருவிய தேங்காய் | : | 3 மேசைக்கரண்டி |
3. | வெங்காயம் | : | 1 பெரியது (நறுக்கியது) |
4. | பச்சை மிளகாய் | : | 2 |
5. | பூண்டு | : | 3-4 (நறுக்கியது) |
6. | சிவப்பு மிளகாய் தூள் | : | ½ தேக்கரண்டி |
7. | மஞ்சள் தூள் | : | ½ தேக்கரண்டி |
8. | உப்பு | : | சுவைக்கேற்ப |
9. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- முளைத்த வெந்தயத்திலிருந்து கடினமான வேர்களை நீக்கி கொள்ளவும்.
தோராயமாக நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சூடேற்றி கொள்ளவும் பின் அதில் நறுக்கிய பூண்டு
மற்றும் பச்சை மிளகாய்களை சேர்க்கவும். ஃப்ரை செய்யவும்.
- பூண்டு இளம் பழுப்பு நிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து மீண்டும் ஃப்ரை
செய்யவும்.
- வெங்காயம் மென்மையாக ஆனதும், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள்
சேர்க்கவும். கிளறவும்.
- பிறகு முளைத்த வெந்தயத்தை சேர்க்கவும். நன்கு கலந்து பின் 2 நிமிடத்திற்கு
அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- தீயை குறைத்து கொண்டு பின் அதில் துருவிய தேங்காயை சேர்க்கவும். நன்கு
கலந்து கொள்ளவும்.
- உப்பு சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும். 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில்
(ஃப்லேம்) சமைக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொள்ளவும்.
- முளைத்த வெந்தய ஃப்ரை தயார். முளைத்த வெந்தய ஃப்ரையை பரிமாறும்
கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.
சப்பாத்தி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.
Watch Video Here: