மிஞ்சிய கிச்சடி பூரி/ Leftover Khichadi Puri /vibsk-32
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | மிஞ்சிய துவரம்பருப்பு கிச்சடி/ஏதாவது மிஞ்சிய கிச்சடி | : | 1 கிண்ணம் |
2. | வெந்தய கீரை | : | 1 கிண்ணம் (பொடிசாக நறுக்கியது) |
3. | பச்சை மிளகாய்கள் | : | 2-3 (நறுக்கியது) |
4. | தெளிந்த நெய் | : | 2 தேக்கரண்டி |
5. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
6. | மஞ்சள் தூள் | : | 1 தேக்கரண்டி |
7. | மல்லி தூள் | : | 1 தேக்கரண்டி |
8. | ஓமம் | : | ½ தேக்கரண்டி |
9. | முழு கோதுமை மாவு | : | 200 கி சுமார் |
10. | எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுக்க |
செய்முறை:
- மிஞ்சிய கிச்சடியிலிருந்து பூரி செய்வதற்கு (உடைத்த கோதுமை மற்றும்
துவரம்பருப்பு/ஏதாவது கிச்சடி): இதில் வெந்தய கீரை, பச்சை மிளகாய்கள்,
சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள், ஓமம் மற்றும் தெளிந்த
நெய்யை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- இப்பொழுது, முழு கோதுமை மாவை இதில் சேர்த்து பின் இறுகிய
மாவைப்போல் பிசைந்து கொள்ளவும்.
- ரொட்டி உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி கொள்ளவும். சிறிது மாவு
எடுத்து அதனை பந்தை போல் உருட்டி கொள்ளவும்.
- ரொட்டி உருட்டும் கட்டையின் மூலம், இதனை சிறு வட்ட டிஸ்கை போல்
உருட்டி கொள்ளவும். 8-10 பூரிகள் வரை உருட்டி கொள்ளவும் மற்றும் ஒதுக்கி
வைக்கவும்.
- கடாயில் எண்ணெய்யை சூடு செய்து கொள்ளவும். தீயை மீடியம் சுடரில்
(ஃப்லேம்) வைத்து கொள்ளவும்.
- மீடியம் அதிக சுடரில் (ஃப்லேம்) பூரிகளை பொன்னிறமாகும் வரை பொரித்து
கொள்ளவும்.
டிப்/ஊறுகாய்/டீயுடன் சூடாக பரிமாறவும்.
Watch video here: