முட்டை டிலைட்/ Egg Delight/vibsk-30
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | அவித்த முட்டை | : | 4 |
2. | பச்சை மிளகாய்கள் | : | 3-4 (பொடிசாக நறுக்கியது) |
3. | வெங்காயம் | : | 2 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது) |
4. | சிகப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடை மிளகாய் | : | ஒவ்வொன்றும் 1 சிறிய அளவு (1” க்யூப்களாக வெட்டியது) |
5. | தக்காளி | : | 2 சிறு அளவு (1” க்யூப்களாக வெட்டியது) |
6. | காளான் | : | 5-6 (சிறு துண்டுகளாக வெட்டியது) |
7. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | 1 சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது) |
8. | வசந்த வெங்காயம் (ஸ்பிரிங் ஆனியன்) | : | 2 (பொடிசாக நறுக்கியது) |
9. | மஞ்சள் தூள் | : | 1/2 தேக்கரண்டி |
10. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
11. | உப்பு | : | சுவைக்கேற்ப |
12. | எண்ணெய் | : | 1 ½ மேசைகரண்டி |
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடிசாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் சாஃப்ட் ஆனதும், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் மாசாலாக்கள் வருந்ததும், கடாயில் தீயை அதிக சுடரில் (ஃப்லேம்) வைத்து அதில் காளான்களை சேர்க்கவும், கிளறி, அதில் குடை மிளகாய்களை சேர்க்கவும்.
- காய் கறிகளை முறுமுறுப்பாக வைப்பதற்கு, கடாயை மூடாமல் மற்றும் தொடர்ச்சியாக கிளறி கொண்டே அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- 3-4 நிமிடத்திற்கு சமைத்த பிறகு கடாயில் வசந்த வெங்காயத்தை (ஸ்பிரிங் ஆனியன்) சேர்க்கவும்.
- அலங்கரிக்க கொஞ்சம் வசந்த வெங்காயத்தை (ஸ்பிரிங் ஆனியன்) வைத்திருக்கவும்.
- 2 நிமிடம் கழித்து, தக்காளி சேர்த்து அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும்.
- கடாயில் அவித்த முட்டையை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- தீயை அணைத்து கொண்டு வசந்த வெங்காயம் (ஸ்பிரிங் ஆனியன்) மற்றும் கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.
முட்டை பாதியாகவோ அல்லது 4 துண்டுகளாகவோ வெட்டி கொள்ளவும். சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Heat oil in a pan and add finely chopped onions to it.