புளி – இஞ்சி தூள் சட்னி/vibsk-03
Read In English: Tamarind-Dry Ginger Dip
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | புளி | : | 50 கிராம் |
2. | சீரகம் | : | 1 தேக்கரண்டி |
3. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
4. | காய்ந்த மிளகாய் தூள் | : | சுவைக்கேற்ப |
5. | காய்ந்த இஞ்சி தூள் | : | 3-4 தேக்கரண்டி |
6. | கருஞ்சீரகம் | : | 1 தேக்கரண்டி |
7. | வெல்லம் | : | 250 கிராம் |
8. | உப்பு | : | சுவைக்கேற்ப |
9. | பழுத்த வாழைப்பழம் | : | 1 (கட்டாயமற்ற) |
10. | உலர்ந்த திராட்சைகள் | : | (கட்டாயமற்ற) |
செய்முறை:
- புளியை வெதுவெதுப்பான நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- புளியை நன்கு தண்ணீரில் குழைத்து கொள்ளவும்.
- புளி நீரிலிருந்து புலி கூழையும், விதயையும் வடிகட்டி கொண்டு பிரித்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மத்திய சுடரில் காய வைக்கவும்.
- முதலில், காய்ந்த எண்ணெயில் சீரகம் சேர்க்கவும். பிறகு சுடரை குறைத்து கொள்ளவும்.
- பிறகு கருஞ்சீரகம், பெருங்காயம் மற்றும் காய்ந்த இஞ்சி தூள் சேர்க்கவும். அடி பிடிக்காமல் இருக்க கிளறி கொண்டே இருக்கவும்.
- கடாயில் புளி நீர் சேர்த்து மீண்டும் கிளறவும்.
- இதில் காய்ந்த மிளகாய் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். இதனை ஐந்து நிமிடம் அதிக சுடரில் வேக வைக்கவும்.
- அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும். அதே சமயத்தில் இவை கொதிநிலை அடையும் போது, தீயை மத்திய சுடரில் வைத்து சட்னியை கெட்டியாகும் வரை சமைக்கவும்.
- உங்களுக்கு விருப்பம் இருந்தால், சட்னியுடன் பழுத்த வாழைப்பழ துண்டுகள் மற்றும் உலர்ந்த திராட்சைகள் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் குறைந்த சுடரில் வேக வைக்கவும்.
இப்பொழுது புளி – இஞ்சி தூள் சட்னி பல வகையான உணவுகளுடன் பரிமாறுவதற்கு தயாராக உள்ளது.
Recipe Step By Step With Pics:
Step-1
-
Soak tamarind in warm water for 2 hours.
Step-2