பாசிப்பயிறு தயிர் வடை/vibsk-01

பாசி பயிறு தயிர் வடை வழக்கமான உழுந்த வடையை விட சீரணத்திற்கு எளிதானது.

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. பாசிப்பயிறு : 1 கிண்ணம்
2. வெங்காயம் : 2 மீடியம் அளவு (சிறிதாக வெட்டி  கொள்ளவும்)
3. கொத்தமல்லிஇலைகள் : 1 சிறிய  கட்டு (சிறிதாக  நறுக்கியது)
4. பச்சை மிளகாய் : 2 (சிறிதாக வெட்டி கொள்ளவும்)
5. தயிர் : 200 கிராம்
6. உப்பு : சுவைக்கேற்ப
7. வறுத்த சீரக பொடி : 1 தேக்கரண்டி
8. பச்சை புதினா சட்னி : 1 கிண்ணம்
9. மாதுளை பழம் : விருப்பத்திற்கேற்ப
10. எண்ணெய் : வறுத்து எடுக்க

 

செய்முறை:

  1. பாசி பயிரை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும் அதன் பிறகு நன்றாக அலசி கொள்ளவும்.
  2. இதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. ஒரு வானொலியில் எண்ணெய்யை விட்டு சூடு செய்யவும். இதில் கொஞ்சம் மாவை போடவும் அப்புறம் அந்த மாவு உடனே மேலெழும்பி வந்தால், எண்ணெய் வறுத்து எடுக்க தயார் நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
  4. ஒன்றன் பின் ஒன்றாக வடையை சூடான எண்ணையில் போடவும். அதில் அனைத்து வடையையும் போடும்வரை ஸ்விட்ச்சை அதிக சுடரில் வைக்கவும்.
  5. அனைத்தையும் போட்டதுக்கு பிறகு, ஸ்விட்ச்சை மீடியம் சுடரில் வைக்கவும் அதன் பின் வடையை செந்நிறமாக வறுத்து கொள்ளவும். நன்றாக வறுக்க இடை இடையே திருப்பி விடவும்.
  6.  வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் 20 நிமிடத்திற்கு வடையை ஊற வைக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது அதிகப்படியான எண்ணெய் வெளியேறி வடை பரிமாறுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும்.
  7. பரிமாறும் முன்பு வடையில் இருந்து தண்ணீரை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
  8. இதில் கொஞ்சம் தயிர், புதினா சட்னி, புளி — இஞ்சி பொடி இனிப்பு சட்னி, வறுத்த சீரக பொடி, காய்ந்த மிளகாய் தூள்பி ன்பு உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்.
  9.  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் பின்பு கொத்தமல்லி இலையுடன் இன்னும் கொஞ்சம் தயிரை சேர்க்கவும்.
  10. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொஞ்சம் மாதுளை முத்துக்களை சேர்த்து கொள்ளவும்.

காரமும் சுவையும் சேர்ந்த பச்சை பயிறு தயிர்வடைகள் தயார், இதனை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழவும்.

 

RECIPE STEP BY STEP WITH PICS:

Step 1

1). Soak Moong Daal for 2 hours & rinse the water.

Step 2

2). Add a little water and grind daal to smooth batter. Mix well.

Step 3

3). Heat oil & fry vade.

Step 4

When vade turns golden brown, take them out.

Step 5

5). After taking out from wok, immediately soak vade in hot water for 1/2 n hour.

Step 6

6). Before serving take them out of the water & keep aside.

Step 7

7). Break 4-5 vade in serving plate. Add some curd, mint chutney, tamarind – ginger               powder sweet chutney, roasted cumin powder, red chilli powder and salt as per taste.

Step 8

8). Add some more curd with chopped onion, green chillies and coriander leaves. If you like than add some pomegranate pearls.

Dahi Vade are ready to be served.

SHARE
Previous articleमागुर फिश करी/vibsk-07
Next articleபுதினா சட்னி/vibsk-02
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here