பட்டாணி-உருளைக்கிழங்கு புலாவ்/ Matar-Aloo Pulao /vibsk-34
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | பச்சை பட்டாணி | : | 1 கிண்ணம் |
2. | உருளைக்கிழங்கு | : | 2 மீடியம் அளவு |
3. | கேரட் | : | 1 சிறு அளவு |
4. | வெங்காயம் | : | 2 சிறு அளவு |
5. | தக்காளி | : | 1 பெரிய அளவு |
6. | பச்சை மிளகாய்கள் | : | 2 |
7. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | அலங்கரிக்க |
8. | அரிசி | : | 500 கி |
9. | மஞ்சள் தூள் | : | ½ தேக்கரண்டி |
10. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
11. | கருப்பு ஏலக்காய் | : | 1 |
12. | முழு கருமிளகு | : | 7-8 |
13. | கிராம்பு | : | 5-6 |
14. | சீரகம் | : | ¼ தேக்கரண்டி |
15. | உப்பு | : | சுவைக்கேற்ப |
16. | தெளிந்த நெய் | : | 1 தேக்கரண்டி |
17. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
- முழு கருமிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- இவை பொடிய ஆரம்பித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஃப்ரை செய்யவும். தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை ஃப்ரை செய்யவும்.
- அதன் பிறகு உருளைக்கிழங்கு துண்டுகள், கேரட் துண்டுகள் மற்றும் பச்சை பட்டாணியை சேர்க்கவும். நன்கு கலந்து 2 நிமிடத்திற்கு சமைக்கவும்.
- தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும். மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து 3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- பிரஷர் குக்கரில் அரிசியை சேர்த்து பின் காய்கறிகளுடன் நன்கு கலந்து கொள்ளவும். தெளிந்த நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இரண்டரை டம்ளர் தண்ணீரை சேர்க்கவும். நன்கு கலக்கவும். பிரஷர் குக்கரை மூடி கொண்டு அதிக சுடரில் (ஃப்லேம்) 1 விசில் வரும் வரை சமைக்கவும்.
- தீயை குறைத்து கொண்டு பின் 5-6 நிமிடங்களுக்கு சமைக்கவும். தீயை அணைத்து கொண்டு பின் பிரஷர் குக்கரை நீராவி வெளியாகும் வரை விட்டு விடவும்.
- புலாவ் தயார். காய்கறிகள் மேலே தங்கும் என்பதால், சாதத்தை காய்கறிகளுடன் மெதுவாக கலந்து கொள்ளவும்.
- இதனை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.
ஊறுகாய் மற்றும் ராய்தாவுடன் சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Heat the oil in a pressure cooker. Add whole black pepper, black cardamom, cloves and cumin seeds.