ஜவ்வரிசி கிச்சடி (உண்ணாவிரத உணவு)/Tapioca Pearls/Sago/Sabudana Khichadi (for fasting)/vibsk-35
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | ஜவ்வரிசி | : | 100 கி 3-4 மணி நேரத்திற்கு ஊற வைத்தது (1 கப் ஜவ்வரிசி 1 கப் தண்ணீரில்) |
2. | வேர்கடலை | : | 50 கி வறுத்தது |
3. | பச்சை மற்றும் சிகப்பு மிளகாய்கள் | : | ஒவ்வொன்றிலும் 2 |
4. | கருவேப்பிலை | : | 10-12 |
5. | சீரகம் | : | 1 தேக்கரண்டி (கட்டாயமற்ற) |
6. | கல்லுப்பு | : | சுவைக்கேற்ப |
7. | கொத்தமல்லி இலைகள் | : | சிறிது அலங்கரிக்க |
8. | வேகவைத்த உருளைக்கிழங்கு | : | 5 சிறிய அளவு |
9. | வேர்கடலை எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- வறுத்த வேர்க்கடலையை கோர்ஸ்லி அரைத்து கொள்ளவும். இதில் பாதி
வேர்க்கடலையை ஊற வைத்த ஜவ்வரிசியில் சேர்க்கவும் மற்றும் நன்கு
கலக்கவும் (ஜவ்வரிசியை சமைக்கும் முன்பு நாம் வேர்க்கடலையை இதில்
சேர்பதினால் ஜவ்வரிசி குறைவாக ஒட்டும்).
- வேகவைத்த உருளைக்கிழங்கை க்யூப்களாக வெட்டி கொள்ளவும். தனியே
வைக்கவும்.
- கடாயில் எண்ணெய்யை சூடு செய்யவும். உருளைக்கிழங்கை சேர்த்து தீயை
அதிக சுடரில் (ஃப்லேம்) வைத்து பொன்னிறம் மற்றும் முறுமுறுப்பாகும் வரை
ஃப்ரை செய்யவும். அதனை வெளியே எடுத்து பின் ஒதுக்கி வைக்கவும்.
- அதே எண்ணெய்யில், சீரகம் சேர்த்து வறுக்கவும். தீயை குறைத்து கொள்ளவும்.
அதன் பிறகு, நறுக்கிய பச்சை மற்றும் சிகப்பு மிளகாய்கள் சேர்த்து ஃப்ரை
செய்யவும். கருவேப்பிலை சேர்க்கவும். கிளறவும்.
- ஊற வைத்த ஜவ்வரிசியை கடாயில் சேர்க்கவும். தொடர்ச்சியாக கிளறி
கொண்டே சமைக்கவும்.
- பாதி சமைத்ததும், கல்லுப்பு சேர்த்து பின் நன்கு கலக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொள்ளவும்.
- ஜவ்வரிசி சமைத்ததும், தீயை அணைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃப்ரை
செய்த உருளைகிழங்குகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை ஜவ்வரிசியுடன்
சேர்த்து பின் நன்கு கலக்கவும்.
- ஜவ்வரிசி கிச்சடி தயார். இதனை பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.
வறுத்து நொறுக்கிய வேர்க்கடலை மற்றும் பொடிசாக நறுக்கிய பிரெஷ்
கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.
ஜவ்வரிசி கிச்சடியை சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Grind the roasted groundnuts coarsely. Add half of the groundnuts to soaked sago and mix well (Sago is less sticky when we add groundnut with it before cooking).