அஷ்டமி பிரசாதத்திற்க்கான காய்ந்த சீரக–கருப்பு சுண்டல்/ Dry Cumin-Black Grams for Ashtami Prasad/vibsk-43
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | கருப்பு சுண்டல் | : | 100 கி (இரவு முழுதும் ஊறவைத்தது) |
2. | சீரகம் | : | 1 & ½ தேக்கரண்டி |
3. | காய்ந்த மாங்காய் தூள் | : | 1 & ½ தேக்கரண்டி |
4. | வறுத்த சீரக தூள் | : | 1 & ½ தேக்கரண்டி |
5. | சிவப்பு மிளகாய் தூள் | : | சுவைக்கேற்ப |
6. | மல்லி தூள் | : | 2 தேக்கரண்டி |
7. | உப்பு | : | சுவைக்கேற்ப |
8. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- ஊற வைத்த கருப்பு சுண்டலுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்
செய்யவும்.
- 1 விசிலுக்கு பிறகு, 8-10 நிமிடங்களுக்கு குறைந்த சுடரில் (ஃப்லேம்) வேக
வைக்கவும்.
- கருப்பு சுண்டல் வெந்தாகி விட்டது. நீரை அரித்து பின் ஒதுக்கி வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய்யை ஊற்றி சுட வைக்கவும். சீரகம் சேர்த்து வறுக்கவும்.
தீயை குறைத்து கொள்ளவும்.
- மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.
6. வேக வைத்த கருப்பு சுண்டலை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
7. காய்ந்த மாங்காய் தூள், சிவப்பு மிளகாய் தூள், வறுத்த சீரக தூள் மற்றும் உப்பு
சேர்த்து (ஏற்கனவே வேகும் பொழுது உப்பை சேர்த்ததால், பார்த்து உப்பு
சேர்க்கவும்). நன்கு கலக்கவும்.
- தீயை மீடியம் அளவில் வைத்து 4-5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
9. 4-5 நிமிடங்களுக்குள் சீரக-கருப்பு சுண்டல் தயாராகிவிடும்.
அஷ்டமி போன்ற மங்களகரமான விழாவில், காய்ந்த சீரக–கருப்பு சுண்டலை பூரி மற்றும் ரவை அல்வாவுடன் கஞ்சக்கா தட்டில் (கஞ்சக்கா தாலியில்) பரிமாறவும்.
Watch Video Here: