ஸ்டஃப்ட் பாகற்காய்கள்–ஸ்டைல் 1/Stuffed Bitter Gourd (Bharva Karele)-Style 1/vibsk-33
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | பாகற்காய் | : | 6-7 மீடியம் அளவு |
2. | மாங்காய் | : | 1 பெரியது (துருவியது) |
3. | இஞ்சி-பூண்டு விழுது | : | 4 தேக்கரண்டி |
4. | வெங்காயம் | : | 3 சிறிய அளவு (பொடிசாக நறுக்கியது) |
5. | சிவப்பு மிளகாய் தூள் | : | 2 தேக்கரண்டி |
6. | மஞ்சள் தூள் | : | 1 ½ தேக்கரண்டி |
7. | மல்லி தூள் | : | 3-4 தேக்கரண்டி |
8. | கரம் மசாலா | : | 1 ½ தேக்கரண்டி |
9. | *ஐந்து விதைகள் | : | 1 ½ தேக்கரண்டி |
10. | உப்பு | : | சுவைக்கேற்ப |
11. | கடுகு எண்ணெய் | : | 2 மேசைக்கரண்டி |
*ஐந்து விதைகள்: ஐந்து விதைகள் கலந்தது- கருப்பு எள், பெருஞ்சீரகம் விதைகள், வெந்தய விதைகள், சீரகம் மற்றும் கடுகு (எல்லா விதைகளையும் சம அளவில் எடுத்தது.
செய்முறை:
- பாகற்காயை தோலுரித்து கொள்ளவும். பாகற்காயின் மேலிருந்து கீழ் வரை
பிளந்து கொள்ளவும். இதிலுள்ள கூழ் மற்றும் விதைகளை வெளியே எடுத்து
கொள்ளவும். கூழ் மற்றும் மென்மையான விதைகளை ஒதுக்கி வைக்கவும்.
கடிமான விதைகளை நிராகரிக்கவும்.
- மாங்காயின் தோலுரித்து மற்றும் துருவி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
- அதிக சுடரில் (ஃப்லேம்) கடுகு எண்ணெய்யை கடாயில் சூடு செய்யவும்.
- தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) வைத்து பின் விதை அகற்றிய பாகற்காயை
ஃப்ரை செய்யவும்.
- அதன் தோல் வேகும் வரை ஃப்ரை செய்யவும்.
- அதனை கடாயிலிருந்து எடுத்து கொண்டு பின் ஒதுக்கி வைக்கவும்.
- அதே எண்ணெயில் ஐந்து விதைகள் சேர்க்கவும். இது பொடிய ஆரம்பித்ததும்,
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஃப்ரை செய்யவும். தீயை குறைந்த சுடரில்
(ஃப்லேம்) கொண்டு வரவும்.
- மல்லி தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள்
சேர்க்கவும். கிளறவும்.
- இஞ்சி-பூண்டு விழுதுடன் அணைத்து மசாலாவும் ரோஸ்ட் மற்றும் நன்கு மிக்ஸ்
ஆனதும், பொடிசாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். கிளறி மற்றும் ஒரு
நிமிடத்திற்கு மீடியம் சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- தீயை குறைத்து கொண்டு பின் வெங்காயம் மென்மையாகும்வரை சமைக்கவும்.
- உரித்த பாகற்காயின் தோல், மென்மையான விதைகள் மற்றும் துருவிய
மாங்காய் சேர்க்கவும்.
- உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை மூடி கொண்டு 10 நிமிடங்களுக்கு
குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- ஸ்டஃபிங் தயாரானதும், ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.
- ஸ்டஃபிங்கை ஃப்ரை செய்த பாகற்காயின் கூடினுள்ளே நிரப்பி கொள்ளவும்.
மதிய உணவு/இரவு உணவுடன் சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Peel the bitter gourds. Make a slit from top to bottom of the bitter gourd. Take out the pulp & seeds. Keep the peel & soft seeds aside. Discard the hard seed.
Step-2
2. Peel & grate the raw mango. Keep aside.
Step-3
3. Heat mustard oil in a wok on high flame.