விரதத்திற்க்கான தாமரை விதைகள் பாயசம் (மக்கனா பாயசம்)/ Fox Nut Pudding (MakhanaKheer) for Fasting/vibsk-40
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | தாமரை விதைகள் (மக்கனா) | : | 1 கிண்ணம் |
2. | பால் | : | 1 லிட்டர் |
3. | சர்க்கரை | : | சுவைக்கேற்ப |
4. | பாதாம் | : | 15-20 (துண்டுகளாக வெட்டியது) |
5. | பிஸ்தா | : | 20 கி (துண்டுகளாக வெட்டியது) |
6. | முந்திரி பருப்பு | : | 15-20 (துண்டுகளாக வெட்டியது) |
7. | தெளிந்த நெய்/நாட்டு நெய் | : | 2 தேக்கரண்டி |
செய்முறை:
- ஒரு கனமான பாத்திரத்தில் தெளிந்த நெய்யை விட்டு பின் மீடியம் சுடரில்
(ஃப்லேம்) கொஞ்சம் சூடு செய்யவும்.
- இதில் தாமரை விதைகளை (மக்கனா) சேர்த்து பின் வறுக்கவும். மிகவும்
அதிகமாக வறுக்க கூடாது.
- தாமரை விதைகள் (மக்கனா) வருந்த பிறகு, பாத்திரத்தில் பாலை சேர்க்கவும்.
பால் நன்கு கொதித்து மற்றும் மேலெழும்பி வரும் வரை அதிக சுடரில் (ஃப்லேம்)
கொதிக்க வைக்கவும்.
4. பிறகு தீயை குறைத்து கொண்டு பால் கெட்டியாகும் வரை கொதிக்க
வைக்கவும். இடைஇடையே கிளறி கொள்ளவும்.
5. கொதிக்கும்போது, ஒரு கெட்டி அடுக்கு உள் பாத்திரத்தின் பக்கத்தில் ஒட்டும்,
அதனை பாத்திரத்தின் பக்கத்திலிருந்து சுரண்டி பாலுடன் கலந்து கொள்ளவும்.
- முந்திரி பருப்பு மற்றும் பாதாம் சேர்த்து பின் இன்னும் கொஞ்சம் பால்
கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- பால் குறைந்த பிறகு, சர்க்கரை சேர்த்து கிளறவும். இன்னும் 5 நிமிடங்களுக்கு
சமைக்கவும். தீயை அணைத்து கொள்ளவும்.
- விரதத்திற்க்கான தாமரை விதைகள் பாயசம் (மக்கனா பாயசம்) தயார்.
9. பிஸ்தாவை கொண்டு அலங்கரிக்கவும்.
சூடாகவோ அல்லது குளிராகவோ பரிமாறவும். இரு வழிகளிலும் மிகவும் ருசியாக இருக்கும்!!
Watch video here: