லம்ப் முட்டைக்கோஸ்/vibsk– 04
Read This Recipe in English: Lump Cabbage |
ஜம்மு & காஷ்மீரிலிருந்து ஒரு ரெசிபி.
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | லம்ப் முட்டைக்கோஸ் | : | 3 – 4 (இலையுடன்) |
2. | காய்ந்த இஞ்சி தூள் | : | 2 தேக்கரண்டி |
3. | சீரகம் | : | 1 தேக்கரண்டி |
4. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
5. | காஷ்மீரி முழு சிவப்பு மிளகாய் | : | 5 அல்லது 6 |
6. | உப்பு | : | சுவைக்கேற்ப |
செய்முறை :
இந்த காஷ்மீரி லம்ப் முட்டைக்கோஸ் ரெசிபியில் முட்டைக்கோஸை அதன் இலையுடன் சமைக்க வேண்டும்.
- லம்ப் முட்டைக்கோஸை அலம்பி, அதன் கடினமான மேல் பகுதியை நீக்கி பிறகு லம்ப் முட்டைக்கோஸை துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இதனுடன் இலையையும் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
- சமையல் பானையை மீடியம் சுடரில் வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் விடவும்.
- சூடான எண்ணெயில் சீரகம், காய்ந்த இஞ்சி தூள், காஷ்மீரி முழு சிவப்பு மிளகாய்கள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
- கொஞ்சம் வறுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் லம்ப் முட்டைகோஸின் துண்டுகளை முதலில் சேர்க்கவும். எல்லா துண்டுகளையும் போட்ட பிறகு, இதனை 1/2 நிமிடம் வறுத்து கொள்ளவும்; அதன் பிறகு அதனுடைய இலையையும் சேர்க்கவும். நன்றாக கிளறி கொள்ளவும்.
- சுவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்.
- 2-3 நிமிடம் கழித்து, 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
- பாத்திரத்தை மூடி மற்றும் 5 நிமிடம் அதிக சுடரில் வைத்து சமைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளறி கொள்ளவும். மீண்டும் பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த சுடரில் வைத்து சமைக்கவும் அல்லது லம்ப் முட்டைக்கோஸ் துண்டுகள் மென்மையாகும் வரை சமைக்கவும்.
- லம்ப் முட்டைக்கோஸ் வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, இதனை தேக்கரன்டியைக்கொண்டு வெட்டவும். அது சுமூகமாக வெட்டினால், தயாராகி விட்டது என்று அர்த்தம்.
வேகவைத்த சாதத்துடன் காஷ்மீரி லம்ப் முட்டைக்கோஸை சுட சுட பரிமாறுங்கள்.
Recipe Step By Step With Pics:
Step-1
- Wash Lump Cabbage, peel off rough outer layer and cut Lump Cabbage in slices. Roughly chop leaves also.
Step-2
2. Put cooking pot on medium flame. Add 1 tsp cooking oil.
Step-3
3. Add cumin seed, dried ginger powder, Kashmiri red chillies and asafoetida in heated oil.
Step-4
4. Fry it a little and add Lump Cabbage slices first. When all slices are in, fry it for ½ minutes & then add leaves to the pot. Mix well.
Step-5
5. Add salt as per taste.
Step-6
6. After 2–3 minutes, add 3 glasses of water.
Step-7
7. Cover & cook for 5 minutes on high flame. After 5 minutes open the lid and stir well. Cover again & cook for 10 minutes on low flame or till Lump Cabbage slices are soft.
Step-8
8. To check that Lump Cabbage is cooked, cut it with spoon. If it cuts smoothly, its done.