பட்டாணி-உருளைக்கிழங்கு புலாவ்/ Matar-Aloo Pulao /vibsk-34

0
409

 

பட்டாணி-உருளைக்கிழங்கு புலாவ்/ Matar-Aloo Pulao /vibsk-34

தேவையான பொருட்கள்:

தேவையானவை:  : அளவு:
1. பச்சை பட்டாணி : 1 கிண்ணம்
2. உருளைக்கிழங்கு : 2 மீடியம் அளவு
3. கேரட் : 1 சிறு அளவு
4. வெங்காயம் : 2 சிறு அளவு
5. தக்காளி : 1 பெரிய அளவு
6. பச்சை மிளகாய்கள் : 2
7. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : அலங்கரிக்க
8. அரிசி : 500 கி
9. மஞ்சள் தூள் : ½ தேக்கரண்டி
10. சிவப்பு மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
11. கருப்பு ஏலக்காய் : 1
12. முழு கருமிளகு : 7-8
13. கிராம்பு : 5-6
14. சீரகம் : ¼ தேக்கரண்டி
15. உப்பு : சுவைக்கேற்ப
16. தெளிந்த நெய் : 1 தேக்கரண்டி
17. எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

 

செய்முறை:

  1. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  2. முழு கருமிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
  3. இவை பொடிய ஆரம்பித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஃப்ரை செய்யவும். தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும்.
  4. பச்சை மிளகாயை சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை ஃப்ரை செய்யவும்.
  5. அதன் பிறகு உருளைக்கிழங்கு துண்டுகள், கேரட் துண்டுகள் மற்றும் பச்சை பட்டாணியை சேர்க்கவும். நன்கு கலந்து 2 நிமிடத்திற்கு சமைக்கவும்.
  6. தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும். மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து 3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  7. பிரஷர் குக்கரில் அரிசியை சேர்த்து பின் காய்கறிகளுடன் நன்கு கலந்து கொள்ளவும். தெளிந்த நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. இரண்டரை டம்ளர் தண்ணீரை சேர்க்கவும். நன்கு கலக்கவும். பிரஷர் குக்கரை மூடி கொண்டு அதிக சுடரில் (ஃப்லேம்) 1 விசில் வரும் வரை சமைக்கவும்.
  9. தீயை குறைத்து கொண்டு பின் 5-6 நிமிடங்களுக்கு சமைக்கவும். தீயை அணைத்து கொண்டு பின் பிரஷர் குக்கரை நீராவி வெளியாகும் வரை விட்டு விடவும்.
  10. புலாவ் தயார். காய்கறிகள் மேலே தங்கும் என்பதால், சாதத்தை காய்கறிகளுடன் மெதுவாக கலந்து கொள்ளவும்.
  11. இதனை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.

ஊறுகாய் மற்றும் ராய்தாவுடன் சுடசுட பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Heat the oil in a pressure cooker. Add whole black pepper, black cardamom, cloves and cumin seeds.

Step-2

2. When it starts cracking, add chopped onions and fry. Bring down the flame to medium.

Step-3

3. Add green chillies. Fry till onions are soft.

Step-4

4. Then add diced potatoes, diced carrots and green peas. Mix well and cook for 2 minutes.

Step-5

5. Add tomatoes and mix. Add turmeric powder, red chilli powder and salt. Mix well and cook for 3 minutes.

Step-6

6. Add rice to pressure cooker and mix well with vegetables. Add clarified ghee and mix well.

Step-7

7. Add 2 and ½ glasses of water. Mix well. Put the lid on pressure cooker and cook on high flame till 1 whistle. Bring down the flame to low and cook for 5-6 minutes. Put the flame off and leave the pressure cooker till all the steam is released.

Step-8

8. Pulao is ready. As vegetables settles on top, softly mix the rice with vegetables.

Step-9

9. Take out in a serving bowl. Garnish with coriander leaves.

Serve hot with Pickles and Raita.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here