உண்ணாவிரதத்திற்க்கான ஜவ்வரிசி வடை/Tapioca Pearls/Sago/Sabudana Vade for Vrat/vibsk-36
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | ஜவ்வரிசி | : | 100 கி (3-4 மணி நேரத்திற்கு ஊற வைத்தது.) (100 கி 100 ml தண்ணியில்) |
2. | வறுத்த வேர்கடலை | : | 50 கி |
3. | வேகவைத்த உருளைக்கிழங்கு | : | 8-9 சிறிய அளவு |
4. | கருவேப்பிலை | : | 10-12 |
5. | வறுத்த சீரகம் | : | 1 ½ தேக்கரண்டி (கட்டாயமற்ற) |
6. | பச்சை மற்றும் சிகப்பு மிளகாய்கள் | : | 2-3 |
7. | கல்லுப்பு | : | சுவைக்கேற்ப |
8. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | 1 சிறிய கிண்ணம் |
9. | தேங்காய் எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுக்க |
செய்முறை:
- ஒரு பெரிய கிண்ணத்தில் கொத்தமல்லி இலைகள், பச்சை மற்றும் சிகப்பு
மிளகாய், கல்லுப்பு, வறுத்து நொறுக்கிய சீரகம், வறுத்த வேர்கடலை மற்றும்
ரஃப்லி நறுக்கிய கருவேப்பிலையை சேர்க்கவும். தனியே வைக்கவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கொண்டு பின் இதனை கிண்ணத்தில்
சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- இப்பொழுது ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும் பின் மீண்டும் நன்கு
கலக்கவும்.
- சிறு பேட்டிஸ்களாக செய்து கொள்ளவும் பின் தனியே வைக்கவும்.
- அதிக சுடரில் (ஃப்லேம்) கடாயில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும். இதில்
சிறிது ஜவ்வரிசி கலவையை போடவும், இது உடனே மேலே வந்தால், எண்ணெய்
பொறித்து எடுப்பதற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம். தீயை மீடியம் அதிக
சுடரில் (ஃப்லேம்) கொண்டு வரவும்.
- கவனமாக பேட்டிஸ்களை கடாயில் போடவும். 2-3 பேட்டிஸ்களை முதலில்
போடவும், இவை கொஞ்சம் ஃப்ரை ஆகட்டும் பின்பு இன்னும் கொஞ்சம் கடாயில்
சேர்த்து கொள்ளவும்.
- கரண்டியை கொண்டு, மெதுவாக எண்ணெய்யை பேட்டிஸ்களின் மீது
விசிறியடிக்கவும். பேட்டிஸ்கள் ஒரு பக்கத்திலிருந்து ஃப்ரை ஆனதும், இதனை
இன்னொரு பக்கத்திற்கு மாற்றி கொண்டு மற்றும் இந்த பக்கமும் ஃப்ரை செய்து
கொள்ளவும்.
- பொன்னிறம் மற்றும் முறுமுறுப்பாகும் வரை ஃப்ரை செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி சட்னி/புதினா சட்னி/வறுத்த வேர்க்கடலை சட்னியுடன் சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
In a big bowl put coriander leaves, green chillies, rock salt (sendha namak), crushed-roasted cumin seeds, roasted groundnuts and roughly chopped curry leaves. Keep aside.
Step-2
2. Mash the boiled potatoes and add it to the bowl. Mix well.