பட்டூரே/Bhature/vibsk-25
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | மைதா | : | 250 கி |
2. | ரவை | : | 50 கி |
3. | தயிர் | : | 100 கி |
4. | பேக்கிங் பவுடர் | : | ½ தேக்கரண்டி |
5. | பேக்கிங் சோடா | : | ¼ தேக்கரண்டி |
6. | உப்பு | : | ½ தேக்கரண்டி |
7. | தூள் சர்க்கரை | : | 1 தேக்கரண்டி |
8. | எண்ணெய் | : | 2-3 தேக்கரண்டி மாவு பிசைவதற்கு |
9. | எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுக்க |
10. | மிதமான சுடு நீர் | : | மாவு பிசைவதற்கு |
செய்முறை:
1. மைதாவுடன் தூள் சர்க்கரை, உப்பு, ரவை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
2. எண்ணெய் சேர்க்கவும் மற்றும் நன்கு கலக்கவும்.
3. தயிர் சேர்க்கவும் மற்றும் மாவை நன்கு மென்மையாக பிசையவும். தேவைப்பட்டால் மிதமான சுடு நீர் சேர்க்கவும்.
4. மாவை நன்கு கையை வைத்து அழுத்தி மென்மையான மாவாக 7-8 நிமிடங்களுக்கு பிசையவும். பிசைந்த மாவு இருக்கமாகவோ அல்லது பிசுபிசுப்பாகவோ இருக்க கூடாது.
5. பிசைந்த மாவில் எண்ணெய் அப்ளை செய்யவும், இதனை சுத்தமான ஈர மஸ்லின் துணியை கொண்டு மூடி விடவும். 3-4 மணி நேரத்திற்கு சூடான இடத்தில் ஒதுக்கி வைக்கவும்.
6. 3-4 மணி நேரத்திற்கு பிறகு பிசைந்த மாவு கொஞ்சம் உப்பிருக்கும்.
7. கையில் எண்ணெய் தடவி கொண்டு மாவு நன்கு மிருதுவாகும்வரை பிசையவும்.
8. ஒருவேளை மாவு ரொம்பவும் பிசுபிசுப்பாக இருந்தால் கொஞ்சம் மைதா மாவை சேர்க்கவும். நன்கு பிசையவும்.
9. மாவை சம அளவு பந்துகளாக பிரித்து கொள்ளவும்.
10. மாவை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து உருட்டி மிருதுவான பந்தைப்போல் செய்து கொள்ளவும்.
11. ரொட்டி உருட்டும் பலகையில் மற்றும் ரொட்டி உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி கொள்ளவும்.
12. ரொட்டி உருட்டும் பலகையில் மாவு பந்தை வைத்து ரொட்டி உருட்டும் கட்டையின் உதவியால் மாவை ஓவல்/வட்டமான வடிவத்தில் செய்யவும்.
13. கடாயில் ஆழமாக பொறித்து எடுப்பதற்கு எண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
14. மீடியம் சுடரில் (ஃப்லேம்), பட்டூரே பொங்கி மற்றும் பொன்னிறமாகும் வரை ஆழமாக பொரிக்கவும்.
15. இதனை வெளியே எடுத்து அதிக எண்ணெயை நீக்க கிச்சன் நாப்கின் பேப்பரில் வைக்கவும்.
16. அணைத்து பட்டூரேவையும் இதே போல் ஆழமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
ச்சோலே, மிக்ஸ் வெஜ் ஊறுகாய்,சாலட் மற்றும் ராய்த்தாவுடன் சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
STEP-1
-
Add powdered sugar, salt, semolina, baking powder & baking soda to all-purpose flour. Mix well.